தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனையில் முரண்நிலை
அரசாங்கத்தின் நிதி பற்றிய குழுவினால் நேற்று (30) அங்கீகரிக்கப்பட்ட தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை இன்று (01) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை தெரியவந்துள்ளது.
அக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வடிவத்தில் இல்லை
மேலும் கருத்து தெரிவித்த அவர், “குழுவில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும், இன்றைய நிகழ்ச்சி நிரலில் முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்கும் இடையே சிறிய முரண்பாடு உள்ளது.
அனைத்து வார்த்தைகளும் ஒரே வடிவத்தில் இருக்க வேண்டும், ஆனால் அந்த வார்த்தைகள் ஒரே வடிவத்தில் இல்லை.
மத்திய வங்கியின் ஆளுநரால் முன்வைக்கப்பட்ட யோசனையுடன், இந்த முன்மொழிவு ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் அந்த முன்வைப்பு தான் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றியதாகும். இந்த யோசனையில் அது இல்லை” என்றார்.
