பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க

Nuwara Eliya Ranil Wickremesinghe Sri Lanka
By Beulah Jun 03, 2023 10:51 AM GMT
Report

நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற “2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில்” உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டுவிட்டது என்று கருத முடியாதென வலியுறுத்திய அதிபர் இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியை கண்டதென தெரிவித்த அதிபர், அந்த நெருக்கடியிலிருந்த மீண்டு வருவதற்கான முயற்சிகளை தாம் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்திருந்தமையையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் சந்தர்பம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க | National Law Confernce 2023 2024 Sl Ranil

இந்நிகழ்வில் அதிபர் மேலும் உரையாற்றுகையில்,

“தேசிய சட்ட மாநாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி ஆராயப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்காக நுவரெலியா தெரிவு செய்யப்பட்மையும் பொருத்தமானதென கருதுகின்றேன்.

கடந்த 10 – 11 மாதங்களுக்கு முன்பாக வலுவிழந்த நாடாக மாறிவிடும் வகையிலான நிலைமைகளை கடந்து வந்துள்ளோம்.

எவ்வாறாயினும் தற்போது சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையும் உருவாகியுள்ளது. இந்த நிலைத் தன்மை குறுகிய காலத்திற்குரியது என்பதால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உணர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அனைவரின் பொறுப்பு

பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க | National Law Confernce 2023 2024 Sl Ranil

மேலும் இக்கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாம் அனைவரும் முன்னரில்லாத சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

ஆனால் இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும், முன்னேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் நோக்கம்

பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க | National Law Confernce 2023 2024 Sl Ranil

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டின் தேசிய நலன்களுக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் சட்டத்தரணிகள் சமூகத்தின் வகிபங்கு பற்றி கலந்துரையாட இந்த மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

முன்னெப்போதையும் விட நமது நாடு, அரசியல் மற்றும் பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல.

எனவே, நாட்டில் அத்தியாவசியமான சட்டக் கட்டமைப்பும் சுதந்திரமான நீதித்துறையும் இருப்பது அவசியம்.

எங்கள் தொழில் வரலாற்றில் முதன்முறையாக, சட்டத் துறையில் மறுசீரமைப்பு செய்யவேண்டிய அல்லது திருத்தப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துரையாட, தேசிய சட்ட மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதைப் போன்று, இலங்கையை வளர்ச்சியடையும் நாட்டிலிருந்து அபிவிருத்தி அடைந்த நாடாகக் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சட்டங்களை எமது சட்டக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதற்கும், அதற்காக சட்டங்களை இயற்றுபவர்களுக்கு உந்துதல்களை ஏற்படுத்தத் தேவையான ஆதரவையும் விழிப்புணர்வையும் இந்த மாநாட்டின் மூலம் வழங்குவதே எமது நோக்கமாகும்"என்று தெரிவித்துள்ளார்.

ஒரு தேசமாக நாம் முன்னேற

பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க | National Law Confernce 2023 2024 Sl Ranil

இதுதொடர்பில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பைசர் முஸ்தபா தெரிவிக்கையில், ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பதோடு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும்.

அத்தோடு, இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வுகளை காண்பதில் அரசியல் தலைமைகளையும் ஈடுபடுத்துவது மிகவும் அவசியம்.

அப்போதுதான் இந்த மாநாட்டின் வெற்றிகரமான முடிவுகளை எம்மால் பெற முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அதிபரின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க, முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க | National Law Confernce 2023 2024 Sl Ranil

பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம் - அதிபர் ரணில் விக்ரமசிங்க | National Law Confernce 2023 2024 Sl Ranil

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026