பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Basil Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis
By pavan Feb 22, 2024 11:04 AM GMT
Report

கம்பஹா, மல்வானையில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினது வீடு என சந்தேகிக்கும் சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவினால் மல்வானையில் 16 ஏக்கர் நிலப்பரப்பில், நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் நீச்சல் தடாகத்துடனான சொகுசு வீடு தொடர்பாக, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

குறித்த வீட்டை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதற்கிணங்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் உறவினரான நடேசனால் குறித்த நிலம் கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு

நீதிமன்றில் வாக்குமூலம்

வழக்கு விசாரணையின் போது, கம்பஹா மேல் நீதிமன்றில் வாக்குமூலம் அளித்த குறித்த வீட்டை நிர்மாணிப்பதற்கு உதவிய கட்டிடகலை நிபுணர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பணத்தினால், ஒப்பந்ததாரர் ஊடாக வீடு கட்டப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், குறித்த வீட்டின் ஆரம்ப பணிகளுக்காக பசில் ராஜபக்ஷவின் மனைவி வருகை தந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு | Nationalize A House Allegedly Built Basil

எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், மல்வானை பகுதியில் தாம் சொகுசு வீட்டை நிர்மாணிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வீட்டின் உரிமையாளரைக் கண்டறிய முடியாத நிலையில், இதனை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக திரிந்தார்கள்..! சபையில் பகிரங்கப்படுத்திய சார்ள்ஸ் எம்.பி

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக திரிந்தார்கள்..! சபையில் பகிரங்கப்படுத்திய சார்ள்ஸ் எம்.பி

களவிஜயம் மேற்கொண்ட விஜயதாஸ

குறித்த சொகுசு வீட்டை நீதியமைச்சுக்கு கீழ் கொண்டு வருவதாகவும், அதனை எதிர்காலத்தில் நீதியமைச்சின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துமாறு கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு | Nationalize A House Allegedly Built Basil

இந்த நிலையில், குறித்த வீடு அமைந்துள்ள பகுதிக்கு நேற்று களவிஜயம் மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, குறித்த பகுதிக்கு பொறுத்தமான வகையில், குறித்த கட்டடத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என விரைவில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

குறித்த வீடானது, 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி