தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமையும் : பிரசன்ன ரணதுங்க

Prasanna Ranatunga Economy of Sri Lanka
By Beulah Oct 23, 2023 01:29 AM GMT
Report

காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்:வீடுகள் சேதம்

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்:வீடுகள் சேதம்

“நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில், அதற்கான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது.

எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் வினைத்திறனுள்ளதாகவும் மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்.” என்றார்.

தேசிய பௌதீக திட்டம்

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் “தேசிய பௌதீக திட்டம் - 2048” தயாரிக்கப்பட்டுள்ளது. அது 2000/49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்டமிடல் கட்டளையின் படி உள்ளது.

தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமையும் : பிரசன்ன ரணதுங்க | Nationl Physicals Planning Policy Sl Prasanna

தேசிய பௌதீக திட்டம் அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு அதிபரின் ஒப்புதலும் கிடைத்தது.

இந்த தேசிய பௌதீக திட்டத்திற்கு அனைத்து மாவட்ட குழுக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ளுமாறும் அதிபர் அங்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், இத்திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளது.

பின்னர் அது வர்த்தமானியில் வெளியிடப்படும். தேசிய பௌதீக திட்டம் நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

முதலாவதாக, 2007 இல் தேசிய பௌதீக திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர் அது 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. "தேசிய பௌதீக திட்டம் - 2048" பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இதன் பிரதான நோக்கு "ஒரு திட்டமிடப்பட்ட நிலையான வளமான நிலம்" என்பதாகும். இந்த தேசிய பௌதீக திட்டம், அமைச்சின் செயலாளர்கள் குழுவிற்குள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பௌதீக திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி தனித்துவமான பங்களிப்பை வழங்கும் நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், புகையிரத, போக்குவரத்து போன்ற அனைத்து அபிவிருத்தி செயன்முறைகளையும் முன்னெடுப்பதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பெருமளவில் தவிர்க்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த தேசிய பௌதீக திட்டம் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026