24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது
இலங்கையில் (Srilanka) ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 601 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச் செயல்
காவல்துறை அதிகாரிகள், இராணுவத்தினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து நேற்று இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 24 பேரும், சந்தேகத்தின் பேரில் 654 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 303 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 141 பேர்.
மற்றும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 11 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 11 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 451 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
