போலி நாணயதாளுடன் கடற்படை வீரர் கைது
போலி நாணய தாள்களுடன் நேற்று முன்தினமிரவு (ஏப்ரல் 9) கடற்படை வீரர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் முச்சக்கரவண்டியில் ஜினானியாகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையொன்றில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக வந்துள்ளனர்.
மது அருந்திய மூவர்
சந்தேகநபர்கள் மூவரில் ஒருவர் 5000 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு மது அருந்திவிட்டு மீதிப் பணத்தை எடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த நோட்டு போலியானது என தெரியவந்ததையடுத்து, ஊழியர்கள் முச்சக்கரவண்டியை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த மூவரையும் பிடித்து கினானியாகல காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
கடற்படை வீரர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23, 25 மற்றும் 26 வயதுடைய நாமல்தலாவ அம்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில், ஒருவரிடம் 4 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் காணப்பட்டதுடன், அவர் கடற்படை வீரர் என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிண்ணியாகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
