கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
இலங்கையின் கற்பிட்டி மாம்புரி கடல் பகுதியில் பெருமளவான பீடி இலைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் (23) இரவு கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, கற்பிட்டி, மாம்புரி கடல் பகுதியில் வைத்து சுமார் 520 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள்
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெறும் கடத்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமேற்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்துக் கப்பல்,நேற்றைய தினம் (23) இரவு தேடுதல் பணியின் ஈடுபட்ட போது, மாம்புரி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான 16 பொதிகளைக் கண்டறிந்து மீட்டது.
தொடர்ந்து பொதிகளை சோதனை செய்த போது, அந்த பொதிகளில் சுமார் 520 கிலோ மற்றும் 760 கிராம் எடையுள்ள பீடி இலைகள் அடைக்கப்பட்டிருந்ததை கடற்படை வீரர்கள் கண்டறிந்தனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
கடற்படை நடவடிக்கைகள் காரணமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்த முடியாமல் கடத்தல்காரர்கள் அவற்றைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட பீடி இலைகளின் இருப்பு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகும் வரை பீடி இலைககடள் ற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |