மண்சரிவு அபாயம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Sri Lanka
Department of Meteorology
Climate Change
Weather
By Shalini Balachandran
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு முதற்கட்ட அபாய எச்சரிக்கை (Landslide Early Warning) நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாளை (24-10-2026) மாலை 4.00 மணி வரை குறித்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இதனை தெரிவித்துள்ளது.
அபாய எச்சரிக்கை
இந்தநிலையில், இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை (Level 2 - Amber) எச்சரிக்கையும், ஏனைய எட்டு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் நிலை (Level 1 - Yellow) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
🛑 இரண்டாம் நிலை எச்சரிக்கை (Level 2 - Amber):
- இரத்தினபுரி மாவட்டம்: எளபத்த, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி
- கேகாலை மாவட்டம்: மாவநல்லை, தெரணியகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் அரநாயக்க
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ மற்றும் நோர்வூட்

🛑 முதலாம் நிலை எச்சரிக்கை (Level 1 - Yellow):
- பதுளை மாவட்டம்: ஹபுத்தளை, ஹல்தும்முல்லை, பஸ்சறை, ஹாலிஎல மற்றும் ஊவா பரணகம
- கொழும்பு மாவட்டம்: படுகா மற்றும் சீதாவக்க
- களுத்துறை மாவட்டம்: ஹொரண மற்றும் மதுகம
- கண்டி மாவட்டம்: யட்டிநுவர, உடுநுவர, உடதும்பறை, தெல்தோட்டை, தொலுவ, மினிப்பே, உடபலாத்த, குண்டசாலை மற்றும் மேததும்பறை
- கேகாலை மாவட்டம்: புளத்கோஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல
- குருணாகல் மாவட்டம்: மாவத்தகம, இப்பாகமுவ, ரீதிகம மற்றும் கணேவத்தை
- மொனராகலை மாவட்டம்: மேதாகம
- நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்