யாழ். உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம், மன்னார், தம்புள்ளை, அனுராதபுரம், கிளிநொச்சி, வவுனியா, சிலாபம், கண்டி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.
தற்போது நிலவும் வானிலை நிலவரங்களின் அடிப்படையில், அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் காற்றுத் தரக் குறியீடு (SL AQI) 88 முதல் 120 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அவதானத்துடன்
மேலும், இன்று காலை 8:00 மணிக்கும் 9:00 மணிக்கும் இடையிலும், மீண்டும் மாலை 4:00 மணிக்கும் 5:00 மணிக்கும் இடையிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்தில் இருக்கும்.

காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது. இவை சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) வேண்டுகோள் விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |