வெளிநாடொன்றில் இடிந்து விழுந்த பாடசாலை: சிக்கி தவிக்கும் மாணவர்கள்
இந்தோனேசியாவில் (Indonesia) பாடசாலை கட்டிடமொன்று இடிந்து விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் செயற்பட்டு வரும் பாடசாலையொன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இவ்விபத்தில் 93 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள்
அத்துடன் 65 மாணவர்கள் வரையில் கட்டிட தொகுதியில் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்விபத்தில் சிக்கி ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடிபாடுகள்
65 மாணவர்கள் காணாமல் போயுள்ளதுடன் அவர்கள் பெரும்பாலும் ஏழு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்பு படை அதிகாரி தெரிவிக்கையில், “இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கின்றோம்.
அதே நேரத்தில் அவர்களை மீட்க நாங்கள் கடுமையாக உழைக்கின்றோம்.
இடிபாடுகளுக்கு அடியில் சிதறிக் கிடந்த பல உடல்களை கண்டோம் ஆனால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
