2023 இல் ஒரு மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு : காமினி வலேபொட தெரிவிப்பு
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் 10இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் (22) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களுடனான சந்திப்பின் போது இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி வலேபொட தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தவணை முறை
"துண்டிக்கப்பட்ட இணைப்புகளை உடனடியாக மீள வழங்குமாறும், மின்சாரக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் முறைமையை நடைமுறைப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் வலேபொட இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மீளிணைப்புக் கட்டணத்தை வசூலிக்காமல் இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தவிரவும், மறு இணைப்புக் கட்டணத்தை தவணை முறையிலும் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |