வீதிகளில் பூட்டப்பட்ட கமராக்கள்! சிக்கிய நூற்றுக்கணக்கான சாரதிகள்
போக்குவரத்து விதிகளை மீறிய 793 வாகன சாரதிகள் கொழும்பில் உள்ள கண்காணிப்பு கமரா அமைப்பின் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துப் பிரிவின் கண்காணிப்பு கமராவில் பதிவாகிய போக்குவரத்து விதிகளை மீறி இடம்பெற்ற குற்றங்களின் காணொளி ஆதாரங்கள் சுமார் 300 காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவற்றை மீள் பரிசீலனை செய்து குற்றங்களுக்கான அபராதப் பத்திரங்கள் உரிய சாரதிகளுக்கு வழங்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் காவல்துறையினர் கண்காணிப்பு கமரா அமைப்பினை ஆரம்பிக்க திட்டமொன்றினை முன்மொழிந்தனர்.
அதன்படி குறித்த திட்டமானது கடந்த ஜனவரி 22 ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பான விழிப்புணர்வு , வாகன சாரதிகளிடம் இல்லை என்பதால் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |