படுகொலை விவகாரம் - நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான படகு சேவை இடைநிறுத்தம்!
Sri Lanka Police
Jaffna
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kalaimathy
நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான படகு சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலேயே குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட காவல்துறை படை மற்றும் தடயவியல் காவல்துறை பிரிவினர் ஆகியோர் நெடுந்தீவுக்கு சென்றுள்ளனர்.
படகு சேவை இடைநிறுத்தம்
நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்களே இனந் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி