அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல்

Fuel Price In Sri Lanka Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Thulsi Nov 03, 2026 06:12 AM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.   

அரசியல் கலந்துரையாடலில் நேற்று (02) இரவு கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை எனத் தெரிவித்தார்.

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி

திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டில் கடற்படை வீரர் பரிதாப பலி

எரிபொருள் இறக்குமதி

குறிப்பாக, துறைமுகத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கே நுகர்வோருக்கு வழங்குமாறு எதிர்க்கட்சி தெரிவித்த போதிலும், உலகில் எந்தவொரு நாட்டிலும் அத்தகைய நடைமுறை இல்லை.

அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல் | Need To Increase Fuel Prices In Sri Lanka Too

மேலும், எரிபொருள் விலை உயர்வால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 57 பில்லியன் ரூபாயை எரிபொருள் மானியமாக ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இருப்பினும், எரிபொருள் இறக்குமதிக்கு செய்ய வேண்டிய செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ள பின்னணியில், எரிபொருள் விலையை முழுமையாகக் குறைப்பதற்கோ அல்லது மேலும் பெருமளவிலான நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசாங்கத்தால் முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

அமெரிக்காவின் பதிலடி : ஈரானின் கெஷ்ம் தீவு மீது தொடர் வான்வழித் தாக்குதல்

அமெரிக்காவின் பதிலடி : ஈரானின் கெஷ்ம் தீவு மீது தொடர் வான்வழித் தாக்குதல்

உலக சந்தையில் எரிபொருள் விலை

உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, நமது நாட்டிலும் எரிபொருள் விலையை ஒப்பீட்டளவில் உயர்த்த வேண்டியிருந்தது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாகவே இந்த அசாதாரண விலை உயர்வு ஏற்பட்டது.

அழுத்தத்தில் மக்கள்: நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை - அமைச்சர் வெளியிட்ட தகவல் | Need To Increase Fuel Prices In Sri Lanka Too

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமானவை அல்ல. துறைமுகத்திற்கு எரிபொருளைக் கொண்டு வரும் விலைக்கே நுகர்வோருக்கு ஏன் வழங்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் அடிக்கடி கேட்கிறார்.

ஆனால் உலகில் எந்தவொரு நாட்டிலும் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படும் விலைக்கே நுகர்வோருக்கு எரிபொருள் வழங்கப்படும் முறைமை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. நான் முன்னரே கூறியது போல், வரிகளைக் குறைப்பதும் மானியங்களை வழங்குவதும் ஒன்றுதான்.

அதனால் இந்த பிரச்சினை எழுந்த ஆரம்ப கட்டத்திலேயே எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கியது. நமது நாட்டில் எரிபொருள் இறக்குமதிக்கு செய்ய வேண்டிய செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதாவது இந்த பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. எனவே இதனை முழுமையாக தளர்த்துவதற்கான தருணம் இதுவல்ல." என்றார்.

TIN இலக்கத்தை பெற அலைமோதும் மக்கள்: இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

TIN இலக்கத்தை பெற அலைமோதும் மக்கள்: இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி