நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்!
நேபாளத்தில் ஏற்பட் பேரழிவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போது இரட்டை பச்சிளம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெளியான காணொளியில் ஒரு பெண் இராணுவ வீராங்கனை இரு குழந்தைகளையும் தனது மார்போடு அணைத்தபடி பாதுகாப்பாக வைத்திருப்பது காணப்படுகிறது.
இரட்டைக் குழந்தைகள் மீட்பு
வெள்ளப் பேரழிவின் நடுவே குழந்தைகளை மீட்டதுடன், அவர்களை ஆறுதல்படுத்திய அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வெள்ளம் சாதாரண பருவமழை வெள்ளம் மட்டுமல்ல.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை, மலை பாறைச் சரிவு சம்பவம் மிகப்பெரிய நீர்ப்பெருக்கை உருவாக்கியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை இன்னும் ஆபத்தானதாக உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன வெள்ளத்தால் உருவான ஒரு தடுப்பு ஏரி நிரம்பி வழியும் அபாயம் இருப்பதால், இன்று 28 அன்று சில மீட்பு நடவடிக்கைகள், குறிப்பாக ஹெலிகாப்டர் மீட்புகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 1,300க்கும் மேற்பட்டோரைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |