நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம்

Nepal World
By Shalini Balachandran Sep 01, 2026 09:56 AM GMT
Report

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது.

துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் 987 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்

ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்

வெளிநாட்டவர்கள் 

அத்தோடு 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

இதனுடன் சீனா வெளியிட்டுள்ள தரவுகளின்படி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 261 வெளிநாட்டவர்கள் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம் | Nepal Glacier Disaster Death Toll Crosses 1 000

இரு நாடுகளிலும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 4,460 இற்கும் அதிகமானோர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த 12 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்களுள் 500 இற்கும் மேற்பட்டோர் சேறும் சகதியும் நிறைந்த இருண்ட சுரங்கங்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்

UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத்தியம்

மீட்புக் குழுக்கள்

அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கி மீட்டெடுக்க இராணுவ மீட்புக் குழுக்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட பனிப்பாறை முறிவே இப் பேரழிவிற்குக் காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம் | Nepal Glacier Disaster Death Toll Crosses 1 000

இந்த வீழ்ச்சி 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு நிகரான அதிர்வை ஏற்படுத்தியதுடன், பனி, பாறைகள் மற்றும் சேறு கலந்த வெள்ளப்பெருக்கு த்ரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளை அடியோடு அழித்தது.

இதுவரை 11,814 க்கும் அதிகமானோர் ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உடல்களைப் பாதுகாப்பதற்காக 1,000 இற்கும் மேற்பட்ட ஃப்ரீஸர் பெட்டிகள் (Freezer units) மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனை உபகரணங்களை நேபாள அரசு சர்வதேச சமூகத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்

நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி பெற்றோரைத் தேடும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016