ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் நெதன்யாகு...! இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா உருவாக்கியுள்ள காஸா அமைதி வாரியத்தில் (Gaza Board of Peace) இணையுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுடனான போரில் காஸா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபைக்கு மாற்றாக அமைதி வாரியம் என்ற புதிய சர்வதேச அமைப்பு ஒன்றை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.
புதிய அமைப்பு
இந்த புதிய அமைப்பில் 9000 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ட்ரம்ப் அறிவித்த புதிய அமைப்பில் இணையுமாறு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

தற்போது ட்ரம்பின் அழைப்பை ஏற்று, அந்த அமைப்பில் இணைவதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலக நாடுகளின் தலைவர்களைக் கொண்டுள்ள அமைதி வாரியத்தில் உறுப்பினராகச் சேருமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்பை நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில், ட்ரம்பின் புதிய அமைதி வாரியத்தில் பிரதமர் நெதன்யாகு பணியாற்றுவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |