அப்பக்கடையில் அரசியல் நடத்தும் பிரஜாசக்தி குழுவினர்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியோரத்தில் வாழ்வாதாரமாக அப்பம் செய்து வியாபாரம் மேற்கொண்டு வரும் பெண்களை அப்பகுதியிலிருந்து அப்பக்கடைகளை அகற்றுமாறு அப்பகுதி பிரஜா சக்தி குழுவினர் கோரியுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில், எமது கிராமத்தின் பிரதான வீதியோரத்தில் அப்பம் விற்கும் கடைகள் அமைந்துள்ளன. அவர்களை நாம் எக்காரணம் கொண்டும் அகற்றுமாறு கூறவில்லை.
அப்பக்கடை நடத்துவோருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்
வீதியோரத்தில் இவ்வாறு சிறிய சிறிய அப்பக் கடைகள் உள்ளதனால் வீதியில் நடந்து செல்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகின்றன. வீதி விபத்துக்ளும் ஏற்படுகின்றன.

எனவே முதற்கட்டமாக அப்பக்கடை வைத்திருப்போர் சற்று ஓரமாக பின்தள்ளி தமது கடைகளை வையுங்கள் என நாம் அவர்களுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தோம்.
பிரஜாாசக்தி குழுவினரின் அரசியல்
பின்னர் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் 150,000 பெறுமதியான நடமாடும் கடை அமைத்துத் தரப்படும், அதனை அவர்கள் கடற்கரை போன்ற வேறு இடங்களுக்கும் நகர்த்திச் சென்று வியாபாரம் மேற்கொள்லாம் எனத் தெரிவித்திருந்தோம்.

இதனைத் திரிபுபடுத்தி தவிசாளர் அரசியல் செய்கின்றார். எனவே அரசியல் வங்குரோத்தை வைத்து விளையாடாமல் எமது பிரஜா சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு வரவும் என அப்பகுதி பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் சு.உதயகுமார் தெரிவிக்கின்றார் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |