இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை: அரசியல் முட்டுக்கட்டை
இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக்கும், முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டின் எதிரணிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிரணிக் கூட்டணி 48 ஆசனங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபுக் கட்சிகள் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஜனாதிபதி
எதிரணிக் கூட்டணியும் அரபுக் கட்சிகளும் இணைந்தால் பெரும்பான்மையைப் பெற முடியும் என்றாலும், அரபுக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐசென்கோட்டின் சில கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இதனால் ஆட்சி அமைப்பதில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்க்க அனைத்துக் கட்சிகளும் திறந்த மனதுடன் செயற்பட வேண்டும் என இஸ்ரேல் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |