சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ள புதிய செயலி!
மக்கள் நீராடச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீராடச் சென்ற இடத்தில், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஒரு தீர்வை பெறும் பொருட்டு சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.
அதன்படி, தற்போது நீரில் மூழ்கி ஏற்படும் மரணங்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்து வருகிறது.
எச்சரிக்கை பலகை
அதனடிப்படையில், 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்த தீர்மானித்துள்ளது.
அதனால் எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதற்கு சேவை வழங்குநர்கள், விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுக்கவும் இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.
வருடாந்தம் உயிரிழப்பு
இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த எச்சரிக்கை பலகைகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1,000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |