ராஜபக்சர் அரசின் தமிழ் முகங்களால் புதிய கைது ஆதாரப்படுத்தும் மாபியா தொடர்பு
இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்குரிய வாழ்த்துச் செய்திகளை வெளியிட தயாராகிய ஆட்சித்தரப்புக்கு கொழும்புககுரிய மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சில கமுக்க டீல்களால் இரண்ரே இரண்டு பெரும்பான்மை வாக்குகளில் என்றாலும் ஒப்பேற்றப்பட்டமை மகிழ்சியை வழங்கியது.
கடந்தவாரம் இதே பாதீடு 3 வாக்குகளால் தோற்படிககபட்ட நிலையில இன்று அதே பாதீடு சிறிலங்கா முஸ்லிம் கொங்ரஸ் உறுப்பினர் ஒருவரின் டீலுடன் வெற்றியடைய குறித்த உறுப்பினர் மீது ஹக்கீம் தரப்பு சீறியுள்ளது.
உள்ளூராட்சிகளில் தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கலவையில் ஆசனங்கள், ஒதுக்கப்படுவதால், தொடர்ந்து அநுரவின் தரப்பின் உள்ளராட்சி பெரும்பான்மை பலத்தில் சவால்கள் இருக்கும் இதே சமகாலத்தில் தொடர்ந்தும் ஒலிக்கும் பாதாள துப்பாக்கி வேட்டுக்களாலும் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் இன்னமும் உள்ள போதைப்பொருள் டீல்காரர்களாலும் சவால்கள் தொடருகிறது.
இவ்வாறான காலத்தில் டக்ளஸ் தேவானந்தா கருணா பிள்ளையான் போன்ற தமிழ் முகங்கள் உட்டபட்ட ராஜபச்ச மார்க அரசியல்வாதிகளும் சிறிலங்கா படை மற்றும் காவற்துறையில் இருந்த மாபியா தொடர்ப்பு பாதாள உலகுக்கு வழங்கிய துப்பாக்கிகள் தொடர்ந்தும் தமது நாசகாரவேலையை காட்டுவதை இந்த புதிய தாக்குதல் செய்திகள் ஆதாரப்படுத்துகின்றன.
வடக்கில்; தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜின்தோட்ட நந்தாராம தேரர் வேறுவழியின்றி வாய்திறந்து;ள நிலையில் இந்தவிடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |