யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமான பேருந்து சேவை
யாழ்ப்பாணம்(jaffna) சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடாக பேருந்து சேவைகள் இன்று காலை 9 மணிமுதல் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டடது .
சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளின் நலன் கருதி சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து 788 வழித்தட சங்க பேருந்து உரிமையாளர்களிடம் வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மூன்று பேருந்துகள் சேவை
இந்நிலையில் இன்று முதல் கீரிமலை, இளவாலை ,தொட்டிலடி , மானிப்பாய், யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடும் 788 வழித்தட தனியார் பேருந்து சேவையிலுள்ள மூன்று பேருந்துகள் தமது சேவையை வைத்தியசாலை ஊடாக மேற்கொள்ளவுள்ளன.
வைத்தியசாலைக்கு செல்வோருக்கு கிடைக்கும் வசதி
இதன் மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் பல தரப்பினரும் நன்மைகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்வில் சங்கானை வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், யாழ் மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பேருந்து கம்பனிகளின் சங்கத்தின் தலைவர் கெங்காதரன் ,இளவாலை சிற்றூர்தி சங்க தலைவர் ,சங்கானை பிரதேச செயலர், மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியசாலை மருத்துவர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

