சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Sri Lanka
By Sathangani
சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) முனையச் செயற்பாட்டுப் பிரிவில் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பேருந்துகள் சுமார் 33 ஆண்டுகள் பழமையானவை என்றும், ஏணிகள் சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ்
இதன் காரணமாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கன் எயார்லைன்ஸின் புதிய நிர்வாக அதிகாரி தலைமையில் குறித்த முடிவுகள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி