புதிய அமைச்சரவை அடுத்த வாரம் - காஞ்சன விஜேசேகர
cabinet
next week
new cabinet
kanchana wijesekera
By Kanna
புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்யும் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில், அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடைநிறுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை தவிர்த்ததாகவும், ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வழங்கியிருந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அரசியலமைப்பை மீறியதற்காக 2018 இல் நீதிமன்றத்திற்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அநியாயமாக இப்போது தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை அரசியலமைப்பின் பிரகாரம் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திப்பதாகவும் அவர் கூறினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி