கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு புதிய நீதவான் நியமனம்!
கம்பஹா புதிய பிரதான நீதவானாக கொசல சேனாதீரவை நீதிச் சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதம் இன்று (06-11-2026) நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை (09-11-2026) முதல் கொசல சேனாதீர தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
தற்போதைய தலைமை நீதவான் பந்துல குணரத்ன உடனடியாக நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவை காவல்துறை மா அதிபர் பின்பற்றத் தவறியதாகவும் நீதித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் பந்துல குணரத்ன மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்த பின்னணியில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |