எரிபொருள் வழங்கலை சீரமைக்க புதிய திட்டம் - பல நிறுவனங்களுக்கு கிட்டவுள்ள வாய்ப்பு
பொருத்தமான நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு குழு நியமனம்
நாட்டில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த குழு நேற்று (05) நியமிக்கப்பட்டதாக அவர் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட பல நிறுவனங்களுக்கும் வாய்ப்பு
இதன்படி, சிபெட்கோ ( CEYPETCO ) மற்றும் லங்கா ஐஓசி ( Lanka IOC) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையில் வெளியானது ஐ.நாவின் வலுவான அறிக்கை! 2 நாட்கள் முன்

ஒன்பதாந் திகதியைக் கடந்தார் ரணில்...!
4 நாட்கள் முன்