அமெரிக்காவை தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளை அறிவித்த மற்றொரு நாடு!
அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாற்றியும் புதிதாக உருவாக்கியும் அமெரிக்க வாழ் வெளிநாட்டினருக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் விரும்பி பயணிக்கும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினும் அதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதால் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் இவ்வாறான தீர்மானத்தை ஸ்பெயின் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம்
பிரபலமான சுற்றுலாத் தலங்களில் திடீரென அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளால் கூட்ட நெரிசல், உள்ளூர் மக்களுக்கு செலவு அதிகரிப்பு என்பவற்றை கட்டுபடுத்தவே மேற்படி நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
பலேரிக் தீவுகள் பகுதியில் கூடுதல் வரி விதிக்கப்படுவதால் இரவில் இந்த பலேரிக் தீவுகளில் தங்க அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் பயணக் கப்பல் கட்டணம் 200% வரை அதிகரிக்கலாம் எனவும் பார்சிலோனா பகுதியில் ஒரு நபருக்கான சுற்றுலா வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், கூடுதல் வரிகள் மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஸ்பெயின் அறிவித்துள்ள நிலையில், தீவுகளில் பல்வேறு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்பெயின் தீவுகளில் புகைபிடித்தல் அல்லது வேப்பிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
மேலும், சூரிய குளியல் பகுதிகளில் பாடல் கேட்பது, கடற்கரையில் சமைத்தல், சிற்பி சேகரித்தல், உடலுறவு கொள்வது, பொது பாதைகளை தடுப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நகரின் சில பகுதிகளில் வாடகை வாகனங்கள் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, லுக்மேஜர், பால்மா, கால்வியா மற்றும் சாண்ட் அன்டோனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9:30 மணி முதல் காலை 8 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்வதைத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், களியாட்ட படகுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
