சிறிலங்காவில் அறிமுகமாகும் புதிய தேர்தல் முறைமை..! பிரதமர் தகவல்
எதிர்காலத்தில் கலப்புத் தேர்தல் முறையொன்று இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் புனித பூமி வழிபாட்டில் நேற்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது தினேஷ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட சத்தியாக்கிரகம் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களும் அதிகரிக்கப்படும்

அதன் பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தற்போதைய அரசியலமைப்புத் திருத்தப்பட்டு புதிய கலப்புத் தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என்றும் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், வாழ்க்கை சுமை அதிகரித்துள்ள மக்களின் நலன்புரி விடயங்களுக்காக புதிய யுக்திகள் கையாளப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.