புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு மகிழ்ச்சி தகவல்
புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் அறவிடப்படும் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதின(7) அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மின்சார நுகர்வோர் புதிய மின் இணைப்பு பெறும் போது அறவிடப்படும் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
மின் இணைப்பு பெறுவோருக்கு சலுகை
அதற்கமைவாக மின் இணைப்பு கட்டணத்தில் 25% செலுத்த வேண்டும்.
புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி முன்பு மின் இணைப்பை துண்டித்த பிறகு, மின்சாரத்தை மீள பெறுவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக இருந்தது. அதை, 800 ரூபாயாக குறைக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அத்துடன் மின் இணைப்பு சீரமைப்பின் போது செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |