இந்தியா - இலங்கைக்கிடையே புதிய கப்பல் சேவை
இந்தியாவின்(India) தமிழகத்துக்கும் இலங்கைக்கும்(Srilanka) இடையே மற்றுமொரு புதிய பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் சேவையானது இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய கப்பல் சேவை
ஒரு மணிநேரத்தில் 250 பயணிகள் பயணிக்கக் கூடிய வகையிலான கப்பல் சேவையை இயக்குவதற்கான விருப்பம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தமிழக கடல்சார் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக இராமேஸ்வரத்தில் தற்காலிக பயணிகள் முனையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு சுங்க சோதனை சாவடியை அமைப்பதற்கும் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கப்பல் சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் கடந்த கால பொறுமையை மீட்டெடுக்கும் எனத் தமிழக கடல்சார் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.வள்ளலார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 10 நிமிடங்கள் முன்
