உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் புதிய சுதந்திரப் போராட்டம் - கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்பேன்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நாட்டில் புதிய சுதந்திரப் போராட்டம் வெடித்து புதிய மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பசி பட்டினியில் தவிக்கும் குடும்பங்கள், எதிர்காலத்தை தொலைத்த இளைஞர், யுவதிகள் மற்றும் கல்வியை இழந்த பிள்ளைகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய சுதந்திரப் போராட்டம்
இதனை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய சுதந்திரப் போராட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து வங்குரோத்தில் உள்ளபோது கொண்டாடப்படுகின்றது.
எமது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருளாதார சுமையை சுமந்து கொண்டிருக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்பேன்
கடந்த காலங்களில் கொள்ளையிடப்பட்ட மக்கள் பணத்தை முகாமைத்துவ அதிகார சபை ஒன்றை உருவாக்குவதன் மூலம் மீட்பேன்.
பண மோசடி சட்டத்தை சீரமைத்து பலப்படுத்துவதுடன், சர்வதேச நிதித்துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு நிதி மோசடிக்காரர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
