எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் 04 நாட்களில் அதாவது இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெறவுள்ளது.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
அந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டதுடன், இரண்டின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
எரிபொருள் விலைகள்
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் விலை 355 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றம் ஏதுமின்றி, அதன் விலை 420 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் விலை 317 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனது X கணக்கின் ஊடாக வெளியிட்டுள்ள குறிப்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுசீரமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |