நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!
இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது
இதன்படி, டீசலின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூபாவில் மாற்றமடையாது அதன் விலை 313 ஆக உள்ளது.
ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோலின் விலை மாற்றமின்றி 371 ஆக உள்ளது.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும்.
இறுதி திருத்தம்
எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) பிற்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி நள்ளிரவில் எரிபொருள் விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது,
அதனை தொடர்ந்து குறித்த விலைகள் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
விலை திருத்தம்
அதன்போது, 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரமே 06 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |