சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு கண்டுபிடிப்பு
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பைன்ஸின் கடல் எல்லைப்பகுதியில்இ புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பலாவன் மாகாணத்தின் வடமேற்கே, தற்போது பயன்பாட்டில் உள்ள மலாம்பாயா எரிவாயு வயலுக்கு மிக அருகிலேயே சுமாா் 5 கி.மீ. தொலைவில் இந்தப் புதிய வளம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி பொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் நேற்று (20) அறிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்னைகள்
இதில் சுமாா் 9,800 கோடி கன அடி எரிவாயு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 57 இலட்சம் வீடுகளுக்குத் தேவையான எரிசக்தியை வழங்க முடியும்.
தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், பிலிப்பைன்ஸின் சொந்தப் பொருளாதார மண்டலத்துக்குள் இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |