சிறிலங்கா சட்டமூலம் தொடர்பில் ஆராய புதிய திட்டம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் முன்னர் அது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கால அவகாசம் வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் முன்னர் அது தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆராய்ந்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயற்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நவீன ஊக்குவிப்பு

நாளை சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முதல் நாள் கொடுப்பதால் எந்த பயனுமில்லை என அவர் கூறினார்.
அதற்காக குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக நவீன ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன் போது தெரிவித்துள்ளார்.
உலக வங்கி உதவி

அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் நவீன ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
உலக வங்கி உதவியின் கீழ் இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ நிதி பெறப்பட்டுள்ளதாகவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்