கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு

Anura Kumara Dissanayaka Eastern Province Election Sri lanka election 2024 General Election 2024
By Shadhu Shanker Sep 26, 2024 02:23 PM GMT
Report

புதிய இணைப்பு 

கிழக்கு மாகாணத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும்.30 வருடம் போராட்டம் நடைபெற்றது. இனிமேல் அந்த நிலைமை வரக்கூடாது.

தேசிய ஒற்றுமை இருந்தால் இந்தப்பகுதி, எமது நாடு என்பன செழித்தோங்கும்.

எனவே எமது செயற்பாட்டிற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என இன்றையதினம் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற முன்னாள் துணைவேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழில் மேற்படி விடயங்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


இரண்டாம் இணைப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் (Trincomalee) உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இவர்  ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.

பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர (JayanthaLalRatnasekera )நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர.இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.

இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

வட மாகாண ஆளுநராக பதவியேற்ற நா. வேதநாயகம்: குவியும் வாழ்த்துக்கள்

வட மாகாண ஆளுநராக பதவியேற்ற நா. வேதநாயகம்: குவியும் வாழ்த்துக்கள்

கிழக்கு மாகாண ஆளுநர்

தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார். அத்துடன் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1988 இல் வேதியியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு | New Governor Appointed For Eastern Province Sl

1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1996 ஆகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

மற்றும் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார் 2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

துணைவேந்தர்

2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு | New Governor Appointed For Eastern Province Sl

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார்.

அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர். குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க , ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முதலாம் இணைப்பு

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantalal Ratnasekara) நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகிவரும் நிலையில் தற்போது புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake)  நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்

புதிய ஆளுநர் நியமனம்

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ( Nagalingam Vedanayakan) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு | New Governor Appointed For Eastern Province Sl

ஜனாதிபதி முன்னிலையில் அவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் (25) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து பொதுத்தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

புதிய ஜனாதிபதிக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016