காவல்துறை நற்சான்றிதழ் பெற புதிய இலக்கங்கள்! வெளியான அறிவிப்பு
காவல்துறை நற்சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக காவல்துறை தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இணையவழியில் காவல்துறை நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை பிரதேச காவல்துறை நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 859 59 46, 071 859 59 47 மற்றும் 071 859 59 48 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |