இலங்கையில் வேகமெடுக்கும் புதிய வைரஸ் - மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka
Virus
By Vanan
புதிய இன்புளுவன்சா வைரஸ் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள்
இந்த வைரஸ் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இது ஒரு தொற்று நோய் என்றும், நபர்களுக்கு நபர் வேகமாகப் பரவும் என்றும் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது கொவிட்-19 வைரஸைப் போன்று ஆபத்தானது அல்ல என ஹேமந்த ஹேரத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் கடுமையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்