உயர்தரப் பரீட்சைக்காக விசேட வேலைத்திட்டம் - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Sri Lankan Schools
By Dharu
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022-2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதர உயர்தர பரீட்சை நாளை (23) முதல் 2,200 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
உயர்தரப் பரீட்சை
இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி