அரச தலைவர் கோட்டாபய வழங்கிய புதிய நியமனம்! (படங்கள்)
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விகும் அதுல களுஆரச்சி (Wikum Athula Kaluarachchi) சிறிலங்கா அரச தலைரவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabhaya Rajapaksha) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று முற்பகல் அரச தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விகும் அதுல களுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டுத்துறைக்குப் பிரவேசித்தவராவார்.
விக்கும் அதுல களுஆரச்சி அவர்களின் 33 வருடகால சேவையில் 27 வருடங்களாக நீதவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
அவர், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட நீதிபதியாகவும் கடமையாற்றியவராவார்.
இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வில், அரச தலைவரின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


