இலங்கையில் யூடியூப் மற்றும் முகநூலை கட்டுப்படுத்த புதிய சட்டம்
இலங்கையில் யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கொழும்பிலுள்ள அதிபர் செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த அதிபர்,
சட்ட கட்டமைப்புகள்
இலங்கையில் செய்தித்தாள்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவ்வாறான சட்ட கட்டமைப்புகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதன் விளைவாக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தை தாம் கொண்டு வந்துள்ளதாகவும், அதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்ற சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதிபர் இந்த நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
