தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக சரத் வீரசேகர
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக உபுல் மகேந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியான சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த இந்தக் கூட்டுப் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.