கொழும்பு மாநகர சபையின் மேயரை அறிவித்தது திசைக்காட்டி

Colombo Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government Wasantha Samarasinghe
By Dhilak Jun 01, 2025 09:37 AM GMT
Report

கொழும்பு மாநகர சபையின் மேயராக விரெய் கெலி பல்தஸார் (Viray Keli Balthasar) திங்கட்கிழமை(02) பதவியேற்பார் என வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe)தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்ற(31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அதிகாரத்திற்கு வரும் தேசிய மக்கள் சக்தி : இராமலிங்கம் சந்திரசேகர்

யாழில் அதிகாரத்திற்கு வரும் தேசிய மக்கள் சக்தி : இராமலிங்கம் சந்திரசேகர்

நிகழ்நிலை காப்புச் சட்டம் 

அதன்போது மேலும் தெரிவித்ததாவது, “உப்பு விவகாரம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் ஊடக அடக்குமுறை என்ற அரசியல் பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

கொழும்பு மாநகர சபையின் மேயரை அறிவித்தது திசைக்காட்டி | New Mayor Of The Colombo Municipal Council

ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்துக்கு அமைய நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட்டால் எவருக்கும் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிடுகின்றன. இதனால் ஒரு தரப்பினர் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் எவரும் எதனையும் குறிப்பிடலாம் என்ற நிலைமை காணப்படுகிறது. இதனை முறையான கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் பதவிக்கு விஜித? ஆளும் கட்சிக்குள் நடப்பதுதான் என்ன...!

பிரதமர் பதவிக்கு விஜித? ஆளும் கட்சிக்குள் நடப்பதுதான் என்ன...!

கொழும்பு மாநகர சபையின் மேயர்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விரெய் கெலி பல்தஸார் நாளை பதவியேற்பார்.

கொழும்பு மாநகர சபையின் மேயரை அறிவித்தது திசைக்காட்டி | New Mayor Of The Colombo Municipal Council

மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் அரச நிதியை கொள்ளையடித்தவர்கள் இன்று சிறை செல்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது.

சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறைச்சாலையின் பெரும்பான்மையை ஊழல்வாதிகள் வெகுவிரைவில் கைப்பற்றுவார்கள்.” என்றார்.

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் - கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் - அதிகார மமதையில் அதிகாரிகள்

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் - கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் - அதிகார மமதையில் அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்