தேர்தல் சீர்திருத்த ஆணையத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்! வெளியான வர்த்தமானி
இலங்கையின் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட 09 பேர் கொண்ட அதிபர் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் மற்றுமொரு உறுப்பினரை நியமித்துள்ளது.
நேற்றைய தினம் (02) அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியின் படி, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக அலன் கார்மைக்கல் வெரே டேவிட் எஸ்குவேர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமைகளை நிறைவேற்ற
வர்த்தமானியின் படி,
- ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் வெவகே பிரியசாத் ஜெரார்ட்
- சுந்தரம் அருமைநாயகம்
- சேனநாயக்க அலிசந்தரலாகே
- நளின் ஜயந்த அபேசேகர
- ராஜித நவீன் கிறிஸ்டோபர் சேனாரத்ன பெரேரா
- அஹமட் லெப்பை மொஹமட் சலீம்
- சகாரிகா டெல்கொடா
- எஸ்தர் ஸ்ரீயானி நிமல்கா பெர்னாண்டோ
- விதாரணகே தீபானி சமந்தா ரொட்ரிகோ
- ஆலன் கார்மைக்கேல் வெரே டேவிட்
ஆகிய 10 பேருமே இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தகவல்களைப் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல், விசாரணை செய்தல், தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை விசாரித்தல் மற்றும் ஆய்வு செய்தல், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை 6 மாதங்களுக்குள் திருத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குதல் உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்றுவதே இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.