உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

Jaffna Football Sports
By Rakesh Apr 07, 2026 04:44 AM GMT
Report

இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கழகம் தேசிய அளவிலான பிரதானத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய 'சம்பியன்ஸ் கிண்ண' நொக்-அவுட் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இலங்கையின் பாரம்பரியமிக்க சோண்டர்ஸ் கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் களமிறங்கியது.

முற்றாக இடிந்து விடும் நிலையில் நல்லூர் மந்திரிமனை - விடுக்கப்பட்ட அழைப்பு

முற்றாக இடிந்து விடும் நிலையில் நல்லூர் மந்திரிமனை - விடுக்கப்பட்ட அழைப்பு

பெனல்டி அவுட் முறை

ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்திலேயே சென். மேரிஸ் வீரர் டஞ்சுமா கம்பாரி மின்னல் வேகத்தில் ஒரு கோலை அடித்துத் தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை தேடித்தந்தார்.

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் | New Milestone Set By St Marys Sports Club Jaffna

இருப்பினும், அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே சோண்டர்ஸ் வீரர் க்ளோவிஸ் ப்ராங்க் ஒரு பதில் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

ஆட்டத்தின் எஞ்சிய பகுதியில் இரு அணிகளும் வெற்றி கோலை அடிக்க கடுமையாகப் போராடிய போதிலும், இரு தரப்பு கோல்காப்பாளர்களும் மிகத் திறமையாகச் செயற்பட்டு கோல் முயற்சிகளை முறியடித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் ஆட்டம் 1 - 1 எனச் சமநிலையில் முடிந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனல்டி அவுட் முறை அமுல்படுத்தப்பட்டது.

இதன்போது சென். மேரிஸ் கழகத்தின் கோல்காப்பாளர் எஸ். ஆர்னிகன் ஒரு கதாநாயகனாகத் திகழ்ந்தார்.

மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்

மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்

அசாத்திய திறமை

சோண்டர்ஸ் கழகம் உதைத்த மூன்று பெனல்டிகளைத் தனது அசாத்திய திறமையால் தடுத்து நிறுத்திய அவர், தாமே ஒரு பெனல்டியை கோலாக மாற்றி 3-1 என்ற கணக்கில் தனது அணிக்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் | New Milestone Set By St Marys Sports Club Jaffna

இந்த வெற்றியின் மூலம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் பிரதான கழகங்களுக்கு இடையிலான தொடர் ஒன்றில் சம்பியனான முதலாவது வடக்கு - கிழக்கு அணி என்ற வரலாற்றுச் சாதனையை நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் படைத்துள்ளது.

அத்துடன், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துடன் மோதிய லீக் மற்றும் நொக்-அவுட் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடையாத முதல் வடக்கு மாகாண அணி என்ற பெருமையையும் இக்கழகம் பெற்றுக்கொண்டது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலக்கரட்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

தங்கப் பாதணி

சம்பியன் பட்டம் வென்ற சென். மேரிஸ் கழகத்திற்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடம் பிடித்த சோண்டர்ஸ் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன.

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் | New Milestone Set By St Marys Sports Club Jaffna

மேலும், சோண்டர்ஸ் வீரர் ரொஜர் பிலிப்பே அதிக கோல்களை அடித்து 'தங்கப் பாதணி' விருதையும், விஜயகுமார் அபிஷான் வளர்ந்து வரும் வீரருக்கான 'தங்கப் பந்து' விருதையும், மொஹமத் லுத்பி சிறந்த கோல்காப்பாளருக்கான 'தங்கக் கையுறை' விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றியானது இலங்கை கால்பந்தாட்டத் துறையில் வடக்கு மாகாண வீரர்களின் அபாரத் திறமையை சர்வதேச தரத்திற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026