ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

United States of America Iran Iran-US Conflict
By Thulsi Apr 07, 2026 04:12 AM GMT
Report

புதிய இணைப்பு

டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள போர் எச்சரிக்கைகள் வெறும் "மாயை" (Delusional) என ஈரானின் உயர்மட்ட கூட்டு ராணுவ கட்டளைப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,"அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அச்சுறுத்தல்கள், பிராந்தியத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள 'அவமானம் மற்றும் இழிவை' ஈடுசெய்யப் போவதில்லை." என தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

முதலாம் இணைப்பு

புதன்கிழமை காலை 10 மணிக்குள் (AEST) எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஈரான் "முழு நாடும் அழிக்கப்படும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி | Trump Warns Iran Fully Opening Strait Of Hormuz

ஒரே இரவில் ஈரானை  வீழ்த்தி விட முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.     

வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த அழிவு 

ஈரானின் பாலங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களை நான்கு மணிநேரத்திற்குள் அழிப்பதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி | Trump Warns Iran Fully Opening Strait Of Hormuz

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இது நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த ஒட்டுமொத்த அழிவு நடவடிக்கையும் வெறும் நான்கு மணிநேர காலப்பகுதியில் அரங்கேறும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நடவடிக்கை மிகவும் பயங்கரமானது

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த இராணுவ வீரரை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி | Trump Warns Iran Fully Opening Strait Of Hormuz

அந்த நடவடிக்கை மிகவும் பயங்கரமானது என்றும், அதில் உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்ட வீரர்களுக்குத் தனது மரியாதையைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய கிழக்கின் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த யோசனைக்கு ஈரான் உத்தியோகபூர்வமாகப் பதிலளித்துள்ளதுடன், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பதிலாகப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதற்காக ஈரான் 10 அம்சங்களைக் கொண்ட கோரிக்கை அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்

ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026