பதவியேற்ற புதிய அமைச்சர்கள் - பிரதி அமைச்சர்கள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Cabinet NPP Government Budget 2026
By Sathangani Oct 10, 2025 05:36 AM GMT
Report

புதிய இணைப்பு

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி, 3 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சரவை அமைச்சர்கள்

1.பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

2.அனுர கருணாதிலக - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

3. வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க - வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

1. அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

2. டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

3. எம்.எம். மொஹமட் முனீர் - சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

4. எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

5. முதித ஹங்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்

6. அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

7. எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

8. யு.டி. நிஷாந்த ஜெயவீர பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

9. கௌசல்யா அரியரத்ன வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

10.ஈ.எம். ஐ. எம். அர்காம் எரிசக்தி பிரதி அமைச்சர்

முதலாம் இணைப்பு 

அநுர அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) அறிவித்துள்ளது.

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

புதிய அமைச்சரவை

இந்தநிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.

பதவியேற்ற புதிய அமைச்சர்கள் - பிரதி அமைச்சர்கள் | New Ministers And Deputy Ministers To Be Sworn

இதேவேளை கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் 18ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026