கைத்தொலைபேசி வாங்கவுள்ளோருக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு
புதிதாக கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அதன்படி இந்த விசேட அறிவித்தலானது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மேனகா பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை வாங்கும் போது அவற்றின் பதிவைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்டதா
பின்னர், புதிய கைத்தொலைபேசிகள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்குரிய முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய தொலைபேசியில் IMEI என தட்டச்சு செய்து புதிய தொலைபேசியில் உள்ள 15 இலக்க IMEI எண்ணினை, தட்டச்சு செய்வதன் மூலம் 1909 க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அங்கீகாரம் பெறுவது அவசியம்
மேலும், கைத்தொலைபேசிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க உடனடி பதில் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
புதிய கையடக்கத் தொலைபேசிகள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் உடன் அங்கீகாரம் பெறுவது அவசியம் என்று கூறிய பத்திரனே, நுகர்வோர் எதிர்கொள்ளும் எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்க சரிபார்ப்பு செயல்முறை உதவும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |