மத்திய மாகாணத்தில் கால்நடைகளிடம் பரவி வரும் நோய்!பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு
Nuwara Eliya
Central Province
By Laksi
மத்திய மாகாணத்தில் கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்த்தாக்கமானது, நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கால்நடைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதுடன் பால் உற்பத்தி வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசிகள்
இந்த நோய்த் தாக்கம் கடந்த காலங்களில் வட மாகாணத்தில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது மத்திய மாகாணத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இந்த நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் இதுவரையில் கால்நடைகளுக்கு வழங்கப்படவில்லை என சில பண்ணையாளர்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி