சிறிலங்கா நாடாளுமன்றில் கொரோனா கொத்தணி?
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு (Amarakeerthi Athukorala) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கும் (Jayantha Samaraweera) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆளும் தரப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாலக்க கோட்டேகொட, சாரதி துஷ்மந்த மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததுடன்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்